பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/198

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
188 இறையனார் அகப்பொருள் (கற்பு றாமை என்னையாற்றிலாமையால் இவள் நங்காதலியல்லள். அவள் போல்வதோர் தெய்வம்; நீ அவளெனக் கருதினாய் நெஞ்சே, நினது மடமையால்; நெஞ்சிற்குச் சொல்லும்; அவள் யாராகியாள் என நெஞ்சிற்குச் சொல்லியதற்குச் செய்யுள் : தலைமகன் நெஞ்சிற்குரைத்தல் ' இல்லென் றிரவலர்க் கீதல்செய் யாதவன் இல்லமெனப் புல்லென்று வாடிப் புலம்பல்நெஞ் சேருமக் கியார் பொருந்தார் வில்லொன்று சேர்பொறி வானவன் வாட விழிஞங்கொண்ட கொல்லொன்று வாட்படை யான் தமிழ் நாடன்ன கோல்வளையே. ' அரையணங் குந்துகி லாளல்லள் ஆற்றுக் குடியில் வென்ற உரையணங் குந் தமிழ் வேந்தன் உசிதெனொண் பூம்பொதியில் வரையணங் கோ அல்லை யோ என்ன யான்மம்மர் எய்தஉண்கண் நிரையணங் கும்பனி நீர்கொள்ள நின்ற இந் நேரிழையே.' (உசுசு) என்பது, தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. அது கேட்ட தலைமகள், 'மேனாள் யான் செய்த குற்றேவல் உட் கொள்வானாயிற்று, என்கட் பேரருளினானன்றே, இவ்வகைப் பேரருளினான் திறத்து இவ்வகை சிவத்தல் தகாது' என்று சிவப்பு நீங்குவாளாவது. (கஎ) சூத்திரம் - ருக நிலம்பெயர்ந் துறையும் நிலையியல் மருங்கின் களவுறை கிளவி தோன்றுவ தாயின் திணை நிலைப் பெயர்க்கோள் கிழவற்கும் வரையார். என்பது என்னு தலிற்றோ எனின், இன்னுங் கற்புக்காலத்துத் தலைமகற்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : நிலம் பெயர்ந்து உறையும் நிலையியல் மருங்கின் என்பது - நிலம்பெயர்ந்து உறையும் என்பது, உள்ளத்துக்கண் நிலைபெற்றவிடத்து என்றவாறு; களவுறை கிளவி தோன்றுவது ஆயின் என்பது- களவு காலத்திற்குரிய சொல் தலைமகள் மாட்டுத் தோன்றுமே எனின் என்றவாறு; திணைநிலைப் பெயர்க்கோள் கிழவற்கும் வரையார் என்பது - திணை நிலைப் பெயர்ந்துகொள்ளுங் கோள் தலைமகற்கும் வரை யார் என்றவாறு.