பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(கற்பு 190 இறையனார் அகப்பொருள் ' மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப் பெருந்தோள் நுணுகிய நுசுப்பின் கல்கெழு கானவர் நல்குறு மகளே.' (குறுந்.எக) இவ்வாறு நினைந்து பாலைநிலத்தானாயினான் செலவழுங்கி மருதநிலத்தானாயினான் எனக்கொள்க. அது, 'திணைநிலைப் பெயர்க்கோள்' கிழவற்கும் உண்டாயினவாறு. பிரிவினை வேண் டாதாள் தலைமகளாயினும் தலைமகனும் வேண்டாதானாகலின் இந்நேரத்துக்கண் என்றவாறு. இன்னும், நிலம்பெயர்ந்து உறையும் நிலையியன் மருங்கின்' என்பது, உடன் கொண்டு போவேன் எனத் தலைமகன் உள்ளத் தின்கண் நிலைபெற்றவிடத்து என்றவாறு. 'களவுறை கிளவி' என்பது, களவுறைந்த காலத்திற்கு உரியசொல், அறத்தொடுநிலை என்றவாறு. 'தோன்றுவதாயின்' என்பது, தலைமகன் மேல் தோழி மாட்டுத் தோன்றுமே எனின் என்றவாறு. 'திணைநிலைப் பெயர்க்கோள் கிழவற்கும் வரையார்' என் பது, பாலைநிலத்தானாயினான் தலைமகன் மருதநிலத்தானாயினான் என்பது. கிழவற்கும் வரையார் என்ற உம்மையால் கிழத்திக்கும் வரையார் எனக்கொள்க. இவளும் உடன்போக்கு ஒட்டிப் பாலைநிலத்தாளாயினாள் , இவன் ஒழிந்தமை சொல்ல மருதநிலத் தாளாயினள் எனக்கொள்க. மேல் உடன்போக்குச் சூத்திரத் துக்கண் உரைக்கும் பொருள் ஈதென்று கொள்க. 'பொருள் வயிற் பிரியினும் புணர்ந்துடன் போகினும் அதுபிரி வுரைப்பினும் பாலை யாகும்.' என்றாராகலின். (கஅ ) சூத்திரம் - ருஉ J, நிலம்பெயர்ந் துறையும் எல்லாப் பிரிவும் * ஒழிந்தோர் அறியவும் அறியா மையும் கழிந்துசேட் படூஉம் இயற்கைய என்ப. என்பது என்னு தலிற்றோ எனின், இதுவும் கற்புக்காலத்துத் தலைமகன் பிரிவின்கண் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. - - -