பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



200 இறையனார் அகப்பொருள் (கற்பு கேட்டான், தலைமகன் கூறத் தோழி கேட்டாள் என்று இவ் வகை அறிந்து உரைப்பது. இடம் என்பது, அவ்வாறு ஒருவர் கூற ஒருவர் கேட்கு மிடம் என்றறிவது; அவை, தன்மை முன்னிலை படர்க்கை என்பன. அவற்றுள், யான் என்பது தன்மை, நீ யென்பது முன்னிலை, அவன் என்பது படர்க்கை. அவற்றுள் இன்னது பற்றி வந்ததென்று அறிவது. காலம் என்பது, இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என மூன்றுவகைப்படும்; அவற்றுள், உண்டான் என்பது இறந்தகாலம், உண்ணாநின்றான் என்பது நிகழ்காலம், உண்பான் என்பது எதிர்காலம். இவற்றுள் இன்ன துபற்றி வந்ததென்று அறிவது. எச்சம் என்பது ஒழிவு, அஃது இரண்டு வகைப்படும். சொல்லெச்சமும் குறிப்பெச்சமும் என. அவையாமாறு முன்னர்ச் சொல்லுதும். - மெய்ப்பாடு என்பது எட்டுவகைப்படும்: அவை-நகை, அழுகை, இளிவரல், மருட்கை , உவகை, அச்சம், பெருமிதம், வெகுளி என இவை; அவற்றுள் இன்னதோர் மெய்ப்பாடு வந்ததென்று அறிவது. பயன் என்பது, இது சொல்ல இன்னது பயக்கும் என்று அறிவது. கோள் என்பது, ஒரு பாட்டினகத்துப் பொருள் கொண்டு நிற்கும் நிலை; அஃது ஐந்துவகைப்படும் - விற்பூட்டு, விதலை யாப்பு, பாசி நீக்கு, கொண்டுகூட்டு, ஒருசிறைநிலை என்றவற் றுள் இன்னதோர் பொருள் கொண்டு நின்றது இப்பாட்டு என்று அறிவது. அவற்றுள், விற்பூட்டுப் பொருள்கோள் வருமாறு : ‘ வருவர் வயங்கிழாய் வாட்டாற் றெதிர்நின்று வாள் மலைந்த உருவ மணிநெடுந் தேர் மன்னன் வீய ஒளிதருமேல் புருவ முரிவித்த தென்னவன் பொன்னங் கழலிறைஞ்சாச் செருவெம் படைமன்னர் போலவெங் கானகஞ் சென்றவரே.' () இனி, விதலையாப்பு வருமாறு : ' பண்தான் அனையசொல் லாய்பரி விட்டுப் பறந்தலைவாய் விண்டார் படச்செற்ற கோன்கொல்லிப் பாங்கர் விரைமணந்த வண்டார் கொடிநின் நுடங்கிடை போல வணங்குவன கண்டாற் கடக்கிற்ப ரோகட வாரன்பர் கானகமே.' (கூகசு)