பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-உ) இறையனார் அகப்பொருள் இவளும் அவனை இவ்வாறே தெரிந்து மக்களுள்ளான் என்பது துணியும். துணிந்தபின்னை இருவர்க்கும் வேட்கை மிகத் தம்மிற் கூடுவது. இவ்வாறு புணரப் பெரிதும் வனப் புடைத்தாய்க் காட்டும் என்பது. இவ்வுரை பொருந்தாது. என்னை காரணம் எனின், இது கைக்கிளை இலக்கணம். தெய்வங்கொல்லோ, மகடூஉக்கொல்லோ என ஐயமுற்ற ஐயநிலையும், தெய்வ இலக்கணந் தீண்டாவாக லின் ஐயந்தெளிந்து மகடூஉவாதல் துவர உணர்ந்த அத்துணிவு நிலைமையும் எனக் கைக்கிளையிலக்கணமாகச் சொல்லப்பட்ட மையின். ஈங்கு அகத்திணையுள் அஃது உரைப்பது திணை மயக் கம் ஆகலின், மேலதே பொருள்.) - 'காமப்புணர்ச்சி' என்றமையின் காமத்தின் வேறு புணர்ச்சியாகல் வேண்டும் பிற, 'வாளாற்கொண்ட கொடி' என் றதுபோல எனின், அற்றன்று, (பொன்னாற்செய்த மஞ்சிகை', 2 'மண்ணாற்செய்த குடம்' என்பதுபோல, வேறன்றி நிற்புழிக் கொள்க என்பது. இஃது இயற்கைப் புணர்ச்சி எனப்படும்; புலவராற் கூறப் பட்ட இயல்பினாற் புணர்ந்தாராகலானும், கந்தருவ வழக்கத் தோடு ஒத்த இயல்பினாற் புணர்ந்தா ராகலானும் என்பது. இனித், தெய்வப் புணர்ச்சி எனவும் படும்; இருவரும் தெய்வத்தன்மையாற் புணர்ந்தாராகலின் என்பது. அல்லதூஉம், முயற்சியும் உளப்பாடும் இன்றி ஒருவற்கு ஒரு கருமம் கை கூடினவிடத்துத் தெய்வத்தினான் ஆயிற்று என்பது. அதுபோல இவர்க்கும் முயற்சியும் உளப்பாடும் இன்றிப் புணர்வு முடிந்த மையானும் தெய்வப்புணர்ச்சி எனப்பட்டது. இதுவே முன்னுறு புணர்ச்சி எனவும்படும்; இவள் நலம் இவனானே முன் னுற எய்தப்பட்டமையானும், இவன்நலம் இவளானே முன்னுற எய்தப்பட்டமையானும் என்பது. இனித், தெய்வப் புணர்ச்சி, முன்னுறு புணர்ச்சி, இயற் கைப் புணர்ச்சி என்பனவற்றுள் ஒன்று சொல்லாது, காமப் புணர்ச்சி யென்றே கூறிய காரணம் என்னை யெனின், இவற் றுள் ஒன்றே சொல்லினும் ஒக்கும்; அல்லது, அவை எல்லாம் அன்பினானே நிகழுமாகலின் காமப்புணர்ச்சி யென்றார் என்பது; பல காரணத்தினாய பொருளை ஒரு காரணத்தினாற் சொல்லுவது சிறப்புடைமை நோக்கி. என்னை, (நிலனும் நீரும் காலமும் 10 வித்தும் என இவற்றினது கூட்டத்தினாய முளையை நெல்முளை (பாடம்) 1. தெரியும். 2. புணர்ந்தமையானும்.