பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- - இறையனார் அகப்பொருள் (களவு என்ப.) நெல்முளைக்கு நெல் சிறப்புடைக் காரணம். நிலனும் நீரும் முதலாகவுடையன பொதுக்காரணம், அவை பயற்று முளை முதலாவுடையனவற்றிற்குக் காரணமாகலான். அது போல ஈண்டும் தெய்வமும் இயற்கையும் முன்னுறவும் பொதுக் காரணம், காமம் சிறப்புக்காரணம், ஆதலான் காமப்புணர்ச்சி எனப்பட்டது. இனி, இருவயின் ஒத்தல் என்பது - என் சொல்லிய வாறோ எனின், புணராதமுன் நின்ற அன்பு புணர்ந்த பின்னும் அப்பெற்றியே நிற்கும் என்றவாறு. ஆயின், உலகினோடு ஒவ்வாது பிற, உலகினிற் புணராதமுன் நின்ற அன்பு புணர்ந்த பின்றைத் தவிர் தலாலும், உண்ணாதமுன் நின்ற வேட்கை உண்டபின்றைத் தவிர்தலானும் என்பது. என்றாற்கு, அறியாது சொல்லுதி, இஃது உலகத்துள்ள பான்மை முன்னே கேட்டாயன்றே, இல் லது இனியது நல்லது என்று புலவரால் நாட்டப்பட்டது என நூல் எடுத்துக் கோடற்கண்ணே சொல்லிப்போந்து, இனி ஒரு கால் உலகினோடு ஒவ்வாதெனல் வேண்டுமோ என்பது. ஆயின், உலகினுள் அன்பன்றாக, புண ராதமுன் நின்ற அன்பு புணர்ந்த பின்னும் அப்பெற்றியே நிற்கும் எனின், புணர்ச்சியானாய பயம் இல்லையாம்பிற, (உண்ணாத முன்னின்ற வேட்கை உண்ட பின்றையும் தவிராது அப்பெற்றியே நிற்குமாயின் உண்டதனா னாய பயம் இல்லை; அதுபோல என்றாற்கு,) அதுவன்று; புண ராதமுன் நின்ற வேட்கை புணர்ச்சியுட் குறைப்படும், அக் குறை பாட்டைக் கூட்டத்தின் கண் தம்முட் பெற்ற செய்குணங்களா னாய அன்புநிறைவிக்கும்; பின்னும் முன்னின்ற அன்பு கூட்டத் திற் குறைபடும். அதற்கு இடையின்றியே குணத்தினானாய அன்பு நிறைவிக்கும்; நிறைவித்தபின் முன்னின்ற அன்பு கூட் டத்திற் குறையாது எஞ்ஞான்றும் ஒரு பெற்றியேயாய் நிற்கும் என்பது. இனி, அவ்வகை புணராத முன்னும் புணர்ந்த பின்னும் ஒத்த அன்பினனாய் நின்ற தலைமகன் பிரியும் என்றுமோ, பிரி யான் என்றுமோ; பிரியும் என்றுமே எனின், அன்பிலன் ஆயி னானாம்; என்னை? பிரிவு அன்பிற்கு மறுதலையாகலான். இனிப் பிரியானே எனினும், அன்பிலன் ஆயினானாம். என்னை பிரியா திருப்ப இவ்வொழுகலாறு பிறர்க்குப் புலனாம்; ஆகவே அவள் இறந்துபடும்; அவள் இறந்துபாட்டிற்குப் பரியான் ஆயினானாம். ஆகவே, மூன்றாவது செய்யப்படுவது இல்லையாலோ எனின், பிரியும் என்பது. ஆயின், அன்பின்மை தங்காதோ எனின், தங்காது. பிரிவும் அன்பினானே நிகழுமாறு சொல்லுதும்.