பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



இறையனார் அகப்பொருள் (களவு வன் புறையும் சொல்லிப் பிரியுமாகலின், பிரிவும் அன்பினானே நிகழ்ந்தது என்பது. தலைவன் தலைவியது அருமையறிதல் இவ்வாற்றால் தலைமகளை ஆற்றிப் பிரிந்த தலைமகன் அவ ளைத் தமியளாக நீங்குமோ எனின், நீங்கான். அவள் தன்னைக் காணாமைத் தான் அவளைக் காண்பதோர் அண்மைக்கண், (மழைக்கொண்டலுள் மின்னுப் புக்கு ஒளித்தாற்போல,) ஒரு தழைப்பொதும்பரிடை மறைந்து நிற்கும் என்பது. அங்கனம் நிற்பத், தலைமகளும் தன் குழற்கற்றைப் பொறையும் கோதை யும் துயல்வரக், கொடியிடை நடுவு தளரப், பாவை அல்குல் துகில் அசையப், பைம்பொற்றோடு மின்னுப் படைப்ப, அரவ வண்டறையும் தாமரை அகவிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி மேற் செம்பொற் சிலம்பு அரற்ற அன்னம் போல மென்மெல ஒதுங்கிக் காமவல்லிக் கொடியும், கற்பகக் கொழுந்தும் நடப்ப தென நடந்து சென்று, அப் பனிவரைச்சாரல் அருகினது ஒரு மணியருவி மருங்கு ஓலுறுத்தப் பளிங்கு விளிம்பு அடுத்த நீலப் பைஞ்சுனை மருங்கினதோர் மரகதச் சிலாவட்டத் தயல் மாணிக் கச் சதுரப் பாறைமேல், தாது தவிசு விளிம்படுத்த மாதவிப் பந்தர்ப் போ துவேய்ந்த பூநாறு கொழுநிழல் இருந்தாள். இருந்தா ளாகத், தாதும் தளிரும் போதும் மேதக்கனவற்றால் குறுங் கண்ணியும், நெடுங் கோதையும், விரவுத்தழையும், சூட்டுக்கத் திகையும், மோட்டு வலயமும், பிறவும் ஆகப் புனைந்து, வண்டும் தேனும் புடைமருட்ட, அடியுறையென ஏந்திப், பிரிந்த ஆயம் பெயர்ந்து எய்திப், போற்றும் பல்லாண்டும் கூறிநின்றார். நிற்ப, அவளும் தாரகை நடுவண் தண்மதி போல்வதோர் பொலிவின ளாய்க் காட்டினாள். காட்டினாளைக் கண்டு, 'இவளை யான் எய்தி னேன் எனக் கருதினன் எய்தியது உண்டேல் கனவேபோலும்! நனவே யாயினும் இவள் எனக்கு எய்துதற்கு அரியளாம்' என ஆற்றானாயினான். அதற்குச் செய்யுள் ‘சினவேல் வலங்கொண்டு செந்திலத் தேற்றதெவ் வேந்தர்கள் போய் இனவேய் நரல்குன்ற மேறவென் றோனிருந் தண்சிலம்பிற் புனவே யனையமென் தோளிதன் னாகம் புணர்ந்ததெல்லாம் கனவே நனவாய் விடினுமெய் தாதினிக் கண்ணுறவே.' (கஎ) ' இருநிலங் காரண மாக நறையாற் றிகன்மலைந்த பொருநில வேந்தரைப் பொன்னுல காள்வித்த பூமுகவேற் பெருநிலங் காவலன் தென்புன னாடன்ன பெண்ணணங்கின் திருநலஞ் சேர்ந்ததெல் லாங்கன வேயென்று சிந்திப்பனே.' (அ) (பாடம்) 1. தனிப்.