பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம் கூ.) இறையனார் அகப்பொருள் 57 57 புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின் தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே கதவ வல்ல நண்ணார் அரண்தலை மதில் ராகவு முரசுகொண் டோம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூடல் அன்னரின் கரும்புடைத் தோளும் உடையவா லணங்கே.' (நற்றிணை-ஙக) என்பது சொல்லி, குழலும் கோதையும் திருத்துவானாகச் சாரும். இது பாங்கற் கூட்டம் ஆமாறு. இடந்தலைப்பாடு இனிப் பாங்கிலன் தமியோள் இடந்தலைப்படுமாறு: 'யாள் இவளை எய்திற்று விதியானே ; இன்னும் அவ்விதி கைதருமேற் காண்பல்' எனப் பாங்கற்குச் சொல்லாதே தான் முன் எதிர்ப் பட்ட இடம் நோக்கிச் செல்லும்; அதற்குச் செய்யுள் : பொழிலிடைச் சேறல் ஆமா றறிபவர் யாரே விதியையர் தீந்தமிழ்நர் சோமான் குலமன்னன் கோனெடு மாறன்கொல் லிச்சிலம்பில் ஏமாண் சிலைநுதல் ஏழைமுன் னேயெதிர்ப் பட்டணைந்த தூ மாண் இரும்பொழி லேபின்னும் யான்சென்று துன்னுவனே. 'பெரும்பான் மையுமறி தற்கரி தாம்விதி பேணிவில்லாப் பொரும்பா ரரசரைப் பூலந்தை வாட்டிய கோன்பொதியிற் கரும்பார் மொழிமட மாதரைக் கண்ணுற்று முன்னணைந்த சுரும்பார் இரும்பொழி லேயின்னும் யான்சென்று துன்னுவனே.) IN பொழில்கண்டு உவத்தல் - என நெருநலைநாளால் அவளைக் கண்ணுற்ற பொழிலே புக்கான். புக்காற்கு, அப்பொழில் பெரியதோர் சார்வாயிற்றாக, ஆற்றாமை நீங்கினான். என்னை, இனியாரொடு தலைப்பெய்த இடங் கண்டாலும் அவ்வினியாரைக் கண்டாலே போலும் எனப்; அதற்குச் செய்யுள் : 'துனிதா னகலமண் காத்துத் தொடுபொறி யாயகெண்டை பனிதாழ் வடவரை மேல்வைத்த பஞ்சவன் பாழிவென்ற குனி தாழ் சிலைமன்னன் கூடலன் னாளது கூடலைப்போல் இனிதா யென துள்ளம் எல்லாங் குளிர்வித்த தீர்ம்பொழிலே.' (கே) காரம் எழாம் வேற்