பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



76 இறையனார் அகப்பொருள் (களவு ' பொருநெடுந் தானைப்புல் லார்தம்மைப் பூலந்தைப் போர்தொலைத்த செருநெடுஞ் செஞ்சுடர் வேல்நெடு மாறன்தென் னாடனையாய் அருநெடுங் காமம் பெருகுவ தாய்விடின் ஆடவர்கள் கருநெடும் பெண்ணைச்செங் கேழ்மட லூரக் கருதுவரே.' (40) 'மாவென படலும் ஊர்ப பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகின் ஆர்க்க வும் படுப் பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே.' (குறுந்-எ) என்றான் தலைமகனோ எனின், அல்லன்; தலைமகனிடனாகப் பிறந்த ஆற்றாமை. அதுகேட்டு முன் குறைபாட்டின்கட் சென்று நின்ற - நாண் உண்டன்றே, அது கெடும்; கெட, அவனது ஆற்றாமைத் தன்மையைத் தன்கட்கொண்டு தலை மகனை ஆற்றுவிப்பதோர் சொற் சொல்லும். அஃதியாதோ எனின்; அரியன தாங்கலன்றே பெரியாரது பெற்றிமை; நீயிர் இதன்றிறத்தின ராகன் மின், யானும் அதன்றிறத்து என்னின் ஆவதுண்டேற் காண்பன்' என்னும். என, அவனது ஆற்றாமை நீங்கும், அது நீங்கத், தலை மகனது நிலைமை நோக்கி, இவன் இறந்துபடான் என்பது உணர்ந்து, இவை சொல்லும்; அவை யாவையோ எனின், ‘மடலேறுவென் என்றிரால், நமக்கு மட லேறுதல் இயைவதுகொல்லோ, என்னை, நீயிர் பேரருளினிர் ஆகலான்' என்னும்; அதற்குச் செய்யுள் : அருளியல் கிளத்தல் ‘பலமன்னு புள்ளினம் பார்ப்புஞ் சினையும் அவையழிய உலமன்னு தோளண்ணல் ஊரக் கொளாய்கொல் ஒலி திரைசூழ் நிலமன்னன் நேரியன் மாறன் நெடுங்களத் தட்ட திங்கட் குலமன்னன் கன்னிக் குலைவளர் பெண்ணைக் கொழுமடலே.' (அக) ' வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே அவையினும் பலவே சிறுகருங் காக்கை அவையினும் அவையினும் பலவே குவிமடல் ஒங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங் குரீஇக் கூட்டுள சினையே.' 'அன்றியும், “மடலேறுவன்" என்றிரால், அம்மடலேறப் படுவார் உருவு எழுதிக்கொண் டன்றே ஏறுவது; நுமக்கு உரு வெழுதல் ஆமோ?' என்னும் ! அதற்குச் செய்யுள் : (பாடம்) 1. இயையாது கொல்லோ .