பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-க0) இறையனார் அகப்பொருள் 81 முடிப்பினல்லது; அதனால் இக்குறை இன்றியமையாமை நோக் கிக் குறைமுடிப்பனெனப் பொய்த்து ஒழுகினேன் ; ஒழுக, நெருநலைநாளால் இக்கானலுள் வந்து என்னை எதிர்ப்பட்டுத் தன் துணைப் புறந்தருவதோர் அலவனைக் கண்டு, "இதுவா காதே அறிவும் ஆண்மையுமாவது! என, அதனை நன்குமதித்து ஆற் றானாய் என்னையும் நோக்கி அலவனையும் நோக்கி, 'உணர்வினை என் கண்ணும் அவ்வலவன் கண்ணும் ஒழியப் போயினான், எத் தன்மைய னாயினான் கொல்லோ ! இன்று வந்திலன்' என்னும் ; அதற்குச் செய்யுள் : ‘பாடுஞ் சிறைவண் டறைபொழிற் பாழிப்பற் றாவரசர் ஒடுந் திறங்கண்ட கோன்கன்னிக் கானல் உறு துணையோடு ஆடும் அலவற் புகழ்ந்தென்னை நோக்கி அறிவழிய நீடு நினைந்து சென் றான் நென்னல் ஆங்கொர் நெடுந்தகையே.' (கூசு) 'பொன்றா விரிபுகழ் வானவன் பூலந்தைப் பூவழிய 'வென்றான் வியன்கன்னி அன்னந்தன் மென்பெடை மெய்யளிப்ப நன்றாம் இதன் செய்கை என்றென்னை நோக்கி நயந்துருகிச் சென்றார் ஒருவர் பின் வந்தறி யாரிச் செழும்புனத்தே.' (கஎ) 'புணர் துணையோ டாடும் பொறியலவன் நோக்கி இணர்கைதைப் பூங்கானல் என்னையும் நோக்கி உணர்ம வாழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன் வணர்புரி ஐம்பாலாய் வண்ணம் உணரேனால். (சிலப்பதிகாரம், கானல்வரி-ஙக.) 'ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென் நன்னர் நெஞ்சம் நெகிழ்ந்த பின்றை வரை முதிர் தேனிற் போகி யோனே ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ வேறுபுலன் நன்னாட்டுப் பெய்த , ஏறுடை மழையிற் கலுழுமென் நெஞ்சே.' (குறுந்-கஎசு) இதுகேட்டு இறந்துபடாதது எற்றிற்கோ எனின், இறந்து படாளன்றே, 'இவன் உளனாயினும் இறந்துபடும்பிற, யான் இறந்துபடின்' என்றதனான், (க) இ. அ.-6