பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



86 இறையனார் அகப்பொருள் (களவு ‘ பூவலர் தண்பொழிற் பூலந்தைப் புல்லா அரசழித்த மாவலர் தானை வரோதயன் கொல்லி மணிவரைவாய் ஏவலர் திண்சிலை யாரெமர் நீங்கார் இருபொழுதும் காவல ராய் நிற்பர் வாரல்மின் நீரிக் கடிப்புனத்தே.' . (கச) இவ்வாறு தோழி சொல்லத் தலைமகன் ஆற்றினவாறு என்னையோ எனின், அச்சொல்லே ஆற்றுவிக்கும்; இவள் இவ் விடத்து நிலைமையை 'மறையாது எனக்கு உரைப்பாளாயது என்கட் கிடந்த பரிவினா னாகாதே; இத்துணை என்கட் பரிவுடை யாள், எனக்கு இது முடியாமையில்லை' என ஆற்றுவானாம். இப் படி அருமையுடைத்தாகலால், இவளின் ஆகாது என்று உணர் வானாயின், வரைந்து எய்துவானாம். இவள் இவையெல்லாந் தலை மகனைச் சொல்லுதற் காரணம் என்னையோ எனின், தனது ஆற்றாமையான் முடிக்கின்றதனை எளிதென உணரும், அது படாமை அரிதென உணர்வானாக என்றற்கு. இனி, அச்சொல்லே ஆற்றுவித்தற்குக் காரணம் என்னையெனின், இது முடியாதென உணரின் இறந்துபடுவான்கொல்லோ என்னும் அச்சத்தினான் என்பது. இதனை இச்சூத்திரத்துள் எங்குந் தந்துரைக்க. என்னை மறைத்தல் எவனாகியரென என்பது - ஆற்றானாகி நின்ற தலைமகனை இஃது இறப்ப இவன் இறந்துபடுமென நின்ற தோழி, 'என்னை நீயிர் இவ்வகையிற்றிரிதற்குக் காரணம் என்னை?" என்னும். 'எனது ஆற்றாமை இன்ன தினாயதென அதனை அறிந் திலள், அறியாதாட்கு இன்னது என் குறை யென்பேனாயின் இவள் மறுக்கவும் பெறும், இவளை இன்னும் பல்கால் நெகிழ ஒழுகின், தானே அறிந்து முடிக்கும்' என உணர்ந்து, 'இன் னது என்குறை யென்னாதானை, நுங்குறையை என்னை மறைத் ததனால் நுமக்காவது என்னை?' என்னும்; அதற்குச் செய்யுள் : மறைத்தமை கூறல் 'மின்னை மறைத்தசெவ் வேல்வலத் தால்விழி ஞத்திலொன்னார் மன்னை மறைத்த எங் கோன் வையை சூழ்பௌவ நீர்ப்புலவர் தன்னை மறைத்திள ஞாழல் கமழுந் தண் பூந்துறைவா என்னை மறைத்திவ்.விடத்திய லாதுகொல் எண்ணியதே.' (கரு) ' திண்டேர் வயமன்னர் சேவூர் அகத்துச் செருவழியக் கண்டே கதிர்வேல் செறித்த எங் கோன்கொல்லிக் கார்ப்புனத்து வண்டேய் நறுங்கண்ணி கொண்டே குறையுற வந்ததனான் உண்டே முடித்தல் எனக்கு மறைப்பினும் உள்ளகத்தே.' (கசு) எனவே, ‘மறையாது விட்டவிடத்து முடிவுண்டு' என்றாள் என்பது.