பக்கம்:இறைவர் திருமகன்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

“நீ இயேசுவோடு இருந்தவனல்லவா ?" என்று அந்த வேலைக்காரி கேட்டாள்.

இதைக் கேட்டு அச்சம் கொண்ட பீட்டர் சற்றும் தயங்காது, "நீ என்ன சொல்கிறாய்? எனக்கு அவரைத் தெரியாதே" என்று கூறினான். பிறகு அந்த இடத்தை விட்டுச் சிறிது அப்பால் அகன்று சென்றான்.

தலைவாசல் அருகே அவன் சென்ற போது அங்கிருந்த ஒரு வேலைக்காரி, “இந்த மனிதன் நாசரத் இயேசுவின் கூட இருந்தவனல்லவா !" என்று வியப்புடன் கூறினாள்.

மீண்டும் பீட்டர் ; “எனக்கு அவரைத் தெரியவே தெரியாது" என்று ஆணையிட்டுக் கூறினான்.

சிறிதுநேரம் சென்ற பின், நெருப்புக் காய்ந்து கொண்டிருந்தவர்களிற் சிலர் அவனருகில் வந்தார்கள். அவர்களில் ஒருவன் பீட்டரைப் பார்த்து, “நீ அவரோடு இருந்தவனே தான். உன் பேச்சே உன்னைக் காட்டிக் கொடுக்கிறது" என்று உறுதியாகக் கூறினான்.

இதைக் கேட்டுக் கோபத்துடன் பீட்டர் அந்த ஆளை நோக்கி, "நீ சொல்லுகிற அந்த