பக்கம்:இறைவர் திருமகன்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

மனிதரை எனக்குத் தெரியவே தெரியாது தெரிகிறதா?" என்று கூறினான்.

அவன் கூறி வாய் மூடிய நேரத்தில் எங்கிருந்தோ காலைச் சேவல் ஒன்று கூவியது.

உடனே பீட்டருக்கு இயேசு பெருமானுடன் தான் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அவரோடு சேர்ந்து சாவதாகத் தான் வாக்களித்ததையும், தான் அத்தகைய உறுதியில்லாத கோழை என்பதைச் சுட்டிக்காட்டி "மூன்று முறை நீ என்னை மறுத்துரைப்பாய்!" என்று அவர் கூறியதையும் நினைத்துக் கொண்டான்.

தன் கோழைத்தனத்தை எண்ணி நொந்து அழுது கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்று சென்றான்.

இயேசு நாதரை அடையாளங் காட்டிக் கொடுத்த ஜுடாஸ் இஸ்காரியட்டை அவன் வேலை முடிந்த பின் கவனிப்பார் யாருமில்லை.

இரவு முழுவதும் அவன் எங்கெங்கோ சுற்றியலைந்து கொண்டிருந்தான். அவன் மனமும் அமைதியில்லாமல் சுழன்று கொண்டிருந்தது. தான் செய்த செயல் எவ்வளவு