பக்கம்:இறைவர் திருமகன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

ராக இருந்த சாட்சியங்களோ பல; அவை வன்மையானவை! மக்கள் கூட்டத்தின் பெருந்தலைவர்களான குருமார்களால் சாட்டப்பட்டவை. ஆனால் அத்தனை சாட்சியங்களைக் கேட்ட பின்னும், அவரைத் தண்டிக்க அவன் மனம் இடங் கொடுக்கவில்லை.

எக் காரணத்தைக் காட்டியாவது அந்தப் பெருந்தன்மை மிக்க, அமைதி வடிவமானமனிதரை விடுவித்துவிட வேண்டும் என்ற எண்ணமே அவன் மனத்தில் மேலோங்கி நின்றது. தன் மனக் கருத்தை நிறைவேற்றிக் கொள்ள அவன் ஒருவழியையும் கண்டுபிடித்துவிட்டான்.

பாரபாஸ் என்ற கொள்ளைக்காரன் ஒருவன் பிடிப்பட்டுத் தண்டிக்கப்பட விருந்தான். அவனால் மக்கள் அடைந்த துன்பங்கள் பல. அவன் பெயரைச் சொன்னாலே பிள்ளைகள் அழுத வாய் மூடும்; பெரியவர்கள் நடுநடுங்கிச் சாவார்கள்; பெண்களோ அதிர்ந்து தன் நினைவு இழந்து போவார்கள். அப்படிப்பட்ட பயங்கரமான திருடன் அவன்.

இயேசுநாதரை விடுதலை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கொண்ட அந்த ரோமானிய