பக்கம்:இறைவர் திருமகன்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18. என்றும் அன்பரோடு இருப்பவர்

ஞாயிற்றுக் கிழமை காலையில் மேரியும் மேரிமக்தலேனாவும் கல்லறையைப் பார்த்து வருவதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அப்போது ஒரு பெரும் பூகம்பம் ஏற்பட்டது. இறைவனின் தூதன் விண்ணுலகிலிருந்து இறங்கி வந்து குகைவாயிலை மூடிக் கொண்டிருந்த பாறையைப் புரட்டினான். அதன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டான்.

அவனைக் கண்ட காவல் வீரர்கள் அஞ்சிச் செத்தவர்கள் போல் ஆகிவிட்டார்கள்.

குகையை நோக்கி வந்த பெண்மணிகளைப் பார்த்த தேவதூதன், "அஞ்சாதீர்கள். சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரைத் தேடிக் கொண்டு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதை