பக்கம்:இறைவர் திருமகன்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

தொழுவத்தின் கதவருகே சென்று நின்று எட்டிப் பார்த்தார்கள். மங்கலாக அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில் ஒரு பசுவும் ஒரு கழுதையும் கட்டிக் கிடப்பதைக் கண்டார்கள். ஆண்டவனின் மகனைப் பெற்ற அன்னை மேரியை ஆவலோடு பார்த்துக் கொண்டு நிற்கும் ஜோசப்பை அவர்கள் கண்டார்கள். இக்காட்சிகளுக்கு மத்தியிலே அவர்கள் ஆவலோடு தேடி வந்த அந்தச் சிறு குழந்தையை அப்போது பிறந்த பச்சைக் குழந்தையை மரத் தொட்டியின் நடுவே சாய்ந்திருந்த புல்லின் மேலே படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் இறைவனின் திருமகனைக் கண்டு இன்ப மடைந்தார்கள்.

தாங்கள் கண்ட இந்த இன்பக் காட்சியைத் தங்கள் சுற்றஞ் சூழல் அனைவருக்கும் தெரிவிக்க அவர்கள் திரும்பிச் சென்றார்கள். இறைவன் புகழ் பாடிக் கொண்டே அவர்கள் இன்பம் நிறைந்த உள்ளத்தோடு, தங்கள் ஆட்டு மந்தைகள் இருக்கும் குன்று நோக்கித் திரும்பினார்கள்.