பக்கம்:இறைவர் திருமகன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

யுங்கள். ஏனெனில் நானும் அந்த அரசனை வணங்க விரும்புகிறேன்" என்றான் ஹெராடு மன்னன்.

அந்த மூன்று அறிஞர்களும் சரியென்று கூறிவிட்டுச் சென்றார்கள். ஹெராடு மன்னன் அந்தத் தெய்வக் குழந்தையைக் கொல்லக் கருதித்தான் அவ்வாறு நயவஞ்சமாகப் பேசினான் என்பதை அவர்கள் அறியவில்லை.

பெத்தலெம் நகருக்கு வந்து சேர்ந்தவுடன் தங்களுக்கு வழிகாட்டிய அந்த நட்சத்திரம் அந்த நகருக்கு மேலே மின்னி நிற்பதை அவர்கள் கண்டார்கள். அந்த நட்சத்திரம் கடைசியாக அசையாமல் நின்ற இடம் தான் அவர்கள் எதிர்பார்த்து வந்த எதிர்கால அரசனின் இருப்பிடம் என்று அறிந்தார்கள்.

எதிர்கால அரசனாகப் பிறந்த அந்தச் சிறு குழந்தை இருந்த இடம் எளிய சின்னஞ்சிறிய வீடாயிருந்தது. வியப்புடன் அந்தப் பெரிய மனிதர்கள் அவ்வீட்டினுள் நுழைந்தார்கள். அங்கே ஒளிமயமான அந்தத் தெய்வக் குழந்தையைக் கண்டதும் அவர்கள் உள்ளம் எல்லாம் இன்ப வெள்ளத்தில் மிதந்தது ! ஆம்!