பக்கம்:இறைவர் திருமகன்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

"யார் இவர்? இவர்தான் தூதர் எலி ஜாவா? இல்லை, ஆண்டவனால் அனுப்பப்படவிருப்பதாகச் சொல்லப்பட்ட கிறிஸ்துதானா?" என்று மக்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டார்கள்.

அதற்கு அந்த இளைஞனே பதில் கூறினான் வனாந்தரங்களிலே கூவிக் கொண்டிருக்கும் ஒருவனுடைய குரலே நான். மக்களே, இறைவனின் வழியைச் சீராக்குங்கள்; நேராக்குங்கள்!" என்று கூவினான்.

"இவர் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரே! கிறிஸ்து பெருமான் வருங்காலம் நெருங்கிவிட்டது போலும்" என்று மக்கள் கருதினார்கள்.

அந்த இளைஞன்தான் ஜான்! ஜான் ஒரு திருத்தூதரே! பூவுலகில் வரப்போகும் இறையரசுக்கு மக்களை ஆயத்தப்படுத்த ஆண்டவனால் அனுப்பப்பட்ட தூதர் அவர்.

கூடியிருந்த மக்கள் ஒவ்வொருவராக ஜான் அருகில் சென்றார்கள். தங்கள் பாவங்களைக்கூறி அவற்றைச் செய்ய நேர்ந்தமைக்காக வருந்தினார்கள், கிறிஸ்துவைச் சந்திப்பதற்கு