இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27
தாங்கள் அருகதையற்றவர்கள் என்று சொல்லிப் புலம்பினார்கள். ஜான் ஒவ்வொருவராக ஆற்றிலே இறக்கி முழுக்காட்டினார். அவர்களுடைய பாவ அழுக்குகளை அகற்றித் தூய்மைப்படுத்தினார்.
"நான் உங்களைத் தண்ணீரினால் தூய்மைப்படுத்துகிறேன். ஆனால் என்னைக் காட்டிலும் வல்லமை மிக்க ஒருவர் வருவார். அவர் உங்களைப் புனித ஆவியினால் தூய்மைப் படுத்துவார்” என்று ஜான் கூறினார்.
நாள் தோறும் மக்கள் ஜானைத் தேடிவந்த வண்ணம் இருந்தார்கள். வந்த ஒவ்வொருவரின் பாவக் கறைகளையும் அகற்றி ஆற்றில் இறக்கி முழுக்காட்டி வைத்தார் அவர்.
ஒருநாள் நாசரத்திலிருந்து தச்சு வேலை செய்யும் ஓர் இளைஞன் வந்தான். தன்னையும் முழுக்காட்டித் தூய்மைப்படுத்துமாறு அவன் ஜானை வேண்டினான்.
ஜான் அந்த இளைஞனை உற்றுநோக்கினார். அவன் யார் என்று அடையாளம் புரிந்து கொண்டார். தன் தாய்வழி உறவினன்