உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இறைவர் திருமகன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

திருத்தொண்டு தொடக்கமாகிவிட்டது கிறிஸ்து அவரே.

அன்றே இயேசு மலைகளும் பாறைகளும் நிறைந்த காட்டுப் பகுதிக்குள் சென்றார். இரவு பகல், வெயில் பனி, பசி பட்டினி எதையும் இலட்சியம் செய்யாமல் ஓநாய்களின் ஓலம் நிறைந்த அந்த மலைக் காட்டின் மத்தியிலே இருந்து இறைவனைத் தொழுது கொண்டிருந்தார்.

நாற்பது பகலும் நாற்பது இரவும் நோன்பு இருந்தடன் அவருக்கு ஒரே பசியாயிருந்தது. அப்போது தீய சக்தியாகிய சைத்தான் அவர் முன் தோன்றி "நீ கடவுளின் பிள்ளையாயிருந்தால் இந்தக் கற்களையெல்லாம் ரொட்டித் துண்டுகளாக மாற்று” என்று கூறியது.

"மனிதன் ரொட்டியைக் கொண்டுதான் வாழவேண்டும் என்பதில்லை; இறைவனின் திருவாயிலிருந்து வெளிப்படும் கட்டளைகளைக் கொண்டே வாழ வேண்டும் என்று வேதத்தில் எழுதப் பெற்றிருக்கிறது" என்று கூறினார் இயேசு.

சைத்தான் அவரைப் புனித நகரமாகிய ஜெருசலத்துக்குத் தூக்கிக் கொண்டுபோய்