பக்கம்:இறைவர் திருமகன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

அந்த பழமைவாதிகள் மோசஸ் பெருமான் அருளிய நெறிமுறைகளை வாழ்வில் ஒழுங்காகக் கடைப் பிடித்து வந்தனர். தங்கள் வருவாயில் பத்தில் ஒரு பகுதியை ஏழை மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தனர். குறிப்பிட்டநாட்களில் நோன்பிருக்க அவர்கள் சிறிதும் தவறியதேயில்லை. எல்லோருக்கும் கேட்கும்படியாகக் குரலெடுத்து அவர்கள் நாள்தோறும் இறைவனைத் தொழுது வந்தார்கள். கடமை தவறாத அவர்கள் நல்லொழுக்கத்தினைப் பிறர் பாராட்டினாலும் யாரும் அவர்களைப் பின்பற்றியதில்லை. அவர்கள் போதனைகளைக் கேட்கயாரும் விரும்பி வந்ததில்லை. குழந்தைகள் அவர்கள் அருகில் செல்லவே பயப்பட்டார்கள்.

இயேசுநாதரோ ஏழை பணக்காரர் என்ற வேறுபாடின்றி யாவரோடும் கலந்து உறவாடினார். தம்மைச் சார்ந்தவர்கள் யாராயினும் அவர்களோடு அன்பு கனியப் பேசினார். தொல்லை யுற்று வந்தவர்களின் துன்பத்தைப் போக்கி அவர்களை எல்லையற்ற மகிழ்ச்சியடையச் செய்தார். சின்னஞ்சிறு குழந்தைகளும் அவரைக் கண்டால் அச்சஞ் சிறிதுமில்லாமல் பாய்ந்தோடிச் சென்று அவருடைய கைகளை அன்