பக்கம்:இறைவர் திருமகன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

போடு பற்றிக் கொள்ளும். யாரையும் புன்சிரிப்புடன் வரவேற்று அன்புடன் பேசி மகிழ்வார்.

இந்தக் காட்சிகளையெல்லாம் அந்தப் பழைமைவாதிகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அதன் காரணமாகவே அவர் மீது பொறாமை ஏற்பட்டது.

இப் பொறாமையின் காரணமாகவே அவர்கள் இயேசுநாதரைப் பலப்பலவாறு கேள்வி கேட்டுக் குற்றங் கூற வேண்டும் என்று எண்ணினார்கள்.

“மோசஸ் பெருமானின் நெறி முறைகளைக் குலைக்க நான் வரவில்லை; மாறாக அவற்றைப் புதுப்பித்து நிறைவு பெறச் செய்யவே வந்திருக்கிறேன்" என்று இயேசுநாதர் அடிக்கடி கூறினார்.

“கொலை செய்யக் கூடாது" என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. நான் கூறுவேன், நீங்கள் கோபம் கொள்ளவே கூடாது என்று. கொலை செய்தால் எப்படி வேத நெறியை மீறியவர்களாவீர்களோ, அவ்வாறே கோபம் கொண்டாலும் வேதநெறியை மீறியவர்கள் ஆவீர்கள்.