பக்கம்:இறைவர் திருமகன்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

இதற்கு நேரடியான சொற்களில் பதில் கூறாமல் இயேசுநாதர் ஒரு கதையே கூறினார்.

அக்கதை கீழ் வருவது தான் :

ஒரு காட்டுப்பாதை. அந்தப் பாதை கரடு முரடானது. பாறைகளும், மலைக்கற்களும் நிறைந்த அந்தப் பாதை வளைந்து வளைந்து சென்றது. அதில் இடையிடையே இருண்ட மலைக் குகைகளும் இருந்தன. அவற்றில் திருடர்கள் மறைந்திருப்பார்கள்.

அந்தப்பாதை வழியாக ஒரு வழிப்போக்கன் சென்றான். திடீரென்று, இம்மலைக் குகைகளில் ஒன்றிலிருந்து வெளிப்பட்ட திருடர் கூட்டம் ஒன்று அந்த வழிப் போக்கனைச் சூழ்ந்து கொண்டது. திருடர்கள் அவனை அடித்து உதைத்து அவனிடம் இருந்த பணத்தையும் துணிமணிகளையும் பறித்துக்கொண்டார்கள். பாதி செத்த நிலையில் அவனைப் பாதையோரத்தில் தள்ளிவிட்டு அத்திருடர்கள் போய்விட்டார்கள்.

அந்தத் திருடர்கள் சென்ற சிறிது நேரத்தில் ஜெருசலத்திலிருந்து அந்தப் பாதை வழியாக ஆலயத்துக் குருக்கள் ஒருவர் சென்றார்.