பக்கம்:இறைவர் திருமகன்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

காயப்பட்டுக் குற்றுயிராகக் கிடக்கும் அந்த மனிதனைக் கண்டார். ஆனால், அவர் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூட இல்லை. நிற்காமல் அவர் தம்வழியே நடந்து சென்று விட்டார்.

சிறிது நேரம் சென்றபின், அந்தப் பாதையில் ஒரு பண்டாரம் சென்றான். அவன் ஒரு கணம், அடிபட்டுக் கிடந்த மனிதனை நின்று பார்த்தான். பிறகு வேகமாக நடந்து சென்று விட்டான்.

அடுத்து அந்த வழியாகச் சென்றவன் சமாரியா நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன். ஒரு கழுதை மேல் நிறையச் சுமை ஏற்றிக் கொண்டுவந்த அம் மனிதன் பாதையோரத்தில் கிடந்த மனிதனைக் கண்டான். அன்பு நிறைந்த அவன் உள்ளம் இரக்கம் கொண்டது. அவன் விரைந்து சென்றான். பாதையோரத்தில் துடித்துக்கொண்டு கிடந்த மனிதனைக் கண்டான். அடிபட்டுக் கிடந்தவன் ஓர் யூதன். யூதர்களுக் கும்சமாரியர்களுக்கும் பிறவிப்பகை. ஆயினும் பகையெண்ணத்தை முற்றும் விலக்கிவிட்டு, அந்த சமாரியன் அந்த யூதனுக்கு உதவி செய்யத்