உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இறைவர் திருமகன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

வேலை பார்த்தும் அவனுக்கு வயிற்றுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை. மேலும் அந்த நாட்டில் பஞ்சம் வேறு வந்து விட்டதால், அவ்வளவு எளிய சம்பளத்தில் அவனால் தனக்கு வேண்டிய உணவைப் பெறுவதற்கே வழியற்றுப் போய்விட்டது. சிலசமயங்களில் மிகப் பசியெடுக்கும் போது, பன்றிகளுக்கு வைக்கும் உணவையே சாப்பிட எண்ணுவான்.

பன்றிகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் அவன் தன்னைப் பற்றி நினைத்துப் பார்த்தான்.

“என் தந்தையாரின் வீட்டில் வேலைக்காரர்கள் கூட மிச்சம் வைக்கும் அளவுக்கு நல்ல சாப்பாடு நிறையக் கிடைக்கிறது. நானோ இங்கே பட்டினியாய்க் கிடக்க வேண்டியிருக்கிறது”

தன்னைத் தானே நொந்து கொண்ட அந்த இளைஞன் திரும்பவும் தன் தந்தையின் இல்லத்துக்குப் போகலாமா என்று நினைத்தான். 'எவ்வளவு சண்டை போட்டுப் பணத்தைப் பிரித்து வாங்கிக் கொண்டு வந்தேன். இனிமேல் என்