இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
51
பிடிவாதத்தோடு வீட்டுக்குள் நுழையாமல் அவன் திரும்பிச் செல்வதை அறிந்த தந்தை ஓடோடிச் சென்றான். வீதியில் அவனைச் சந்தித்தான்.
“இத்தனை நாளாக நான் உங்களுக்காக உழைத்தேன். உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தேன். ஒரு நாளாவது நான் என் நண்பர்களோடு உல்லாசமாக விருந்துண்ண ஏற்பாடு செய்தீர்களா?" என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான் பெரியவன்.
"என் அன்பு மகனே, எல்லாவற்றையும் ஒன்றாக அனுபவித்துக் கொண்டு என்னுடனேயே எப்போதும் இருந்து வருகிறாய் நீ. உன் தம்பியோ தீயவழியில் சென்று திருந்தி விட்டான். காணாமல் போன அவன் இப்போது அகப்பட்டுவிட்டான். இதற்காக நாம் மகிழ்ச்சியடைய வேண்டாமா? வாடா மகனே வா! “என்று அவனை அன்போடு வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு வந்தான்.
இயேசுநாதர் கதையை முடித்தார். பாவம் செய்த தன் மகனை மன்னித்த அன்புள்ள தந்தையைப் போல ஆண்டவன், திருந்திய