பக்கம்:இறைவர் திருமகன்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7 எளிமையில் கிடைக்கும் உயர்வு

“இறைவனின் பேரரசை நிலைநாட்டவே நான் வந்திருக்கிறேன்" என்று இயேசுநாதர் கூறிவந்தார். இதைக் கேட்ட அவருடைய பன்னிரண்டு சீடர்களும், உண்மையிலேயே பூவுலகில் அவர் ஓர் அரசாட்சியினை நிறுவப் போகிறார் என்று எண்ணினார்கள். எத்தனையோ நாட்கள் அவர் கூடவே இருந்தும் அவர்கள் அவரைச் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. ரோமானியர்களை விரட்டிவிட்டு அவர் ஜெருசலத்தின் ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார் என்றே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த எண்ணம் அவர்கள் மனத்தில் பல கற்பனைகளை உருவாக்கியது. புதிய அரசில் நம் நிலை என்ன? என்று அவர்கள் மனக்கோட்டை கட்டத் தொடங்கினார்கள். இத்தனை

ஏசு-4