பக்கம்:இறைவர் திருமகன்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. நெஞ்சுவக்கும் பிஞ்சுமக்கள்

ஒரு நாள் ஜோர்டான் ஆற்றங்கரையிலே இயேசுநாதர் போதனை புரிந்து கொண்டிருந்தார். மக்கள் ஏதோ கூட்டமாக அவரைச் சுற்றிச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள். இந்தக் கூட்டத்தின் இடையில் வேதம் எழுதி வைத்திருக்கும் பழைய மதவாதிகள் நின்று அவரைக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது சில தாய்மார்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். சிலர் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டும், சிலர் கையில் பிடித்து நடத்திக் கொண்டும் வந்தார்கள். அவர்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு, இயேசுநாதரின் அருகில் செல்ல முயன்றார்கள்.

"எங்களுக்கு வழிவிடுங்கள். இயேசு நாதரிடம் எங்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துப்