பக்கம்:இறைவர் திருமகன்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அந்த மரக்கிளை யொன்றிலிருந்து இயேசு நாதரைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன். இயேசுநாதரும் அவனைப் பார்த்து விட்டார்.

அந்த மனிதன் பெயர் சாச்சியஸ். ஜெரிச்சோ நகர் முழுவதும் அவனையறியும். ஆனால், மக்களில் ஒருவர் கூட அவனை விரும்பியதில்லை. அத்தனை பேரின் வெறுப்புக்கும் ஆளாகிய அவன் ஒரு வரி வசூல் அதிகாரி அவன் மிகவும் குட்டையானவன். எனவே, தன்னை வெறுக்கும் கூட்டத்தின் இடையில் புகுந்து முன் செல்ல முடியாமல் அவன் மரக் கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அங்கிருந்து அவன் இயேசு நாதரைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

இயேசுநாதர் தன்னைக் கவனிப்பார் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. "சாச்சி யஸ், விரைவில் கீழே இறங்கி வா. இன்று நான் உன் வீட்டில்தான் தங்கப் போகிறேன்" என்று இயேசுநாதர் கூறியவுடன் அவன் வியப்பு மேலும் பெருகியது.

யாருக்கும் கிடைக்காத பேறு பாவியாகிய தனக்குக் கிடைத்ததை எண்ணி அவன் உள்ளம் களிபொங்கியது. மகிழ்ச்சியுடன் பரபர