பக்கம்:இறைவர் திருமகன்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

தோறும் ஜெருசலம் போய் வருவது என்று முடிவு செய்திருந்தார் இயேசுநாதர்.

இயேசுநாதர் வரும் செய்தியறிந்து முன்னதாகவே விருந்து தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள் மார்த்தா. இயேசுநாதருடன் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அவள் பல நண்பர்களையும், பன்னிரு சீடர்களையும் கேட்டுக்கொண்டிருந்தாள்.

மேரியோ துயரத்தோடு சிந்தனையில் ஈடுபட்டிருந்தாள். குருமார்கள் இயேசுநாதரின் மீது அழுக்காறு கொண்டிருந்தார்கள் என்று அவள் அறிவாள். ஜெருசலத்தில் அவருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று அவள் பயந்தாள். இயேசு நாதருக்கும் இது தெரியும் என்று அவள் நம்பினாள். துணிவுடன் அவள் அதைச் சந்திக்கப் போவது குறித்து அவள் வியந்தாள்.

இயேசுநாதர் மீது தான் கொண்டுள்ள அன்பையும் மதிப்பையும் எவ்வாறு வெளிப்படுத்துவது என்று அவள் சிந்தித்தாள். விருந்தினர் அனைவரும் வந்து சாப்பாட்டுக்கு உட்காரும் வரையில் அவள் காத்திருந்தாள். எல்லோரும் அவரவர் இடத்தில் வந்து அமர்ந்தபின் அவள் ஒரு சிறு போத்தலில் இருந்த நறு