பக்கம்:இறைவர் திருமகன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

அவர்கள் மறுப்புரைக்காமல் நேரே அதை இங்கே அனுப்பி வைப்பார்கள்” என்று கூறி அந்த இரு சீடர்களையும் அனுப்பினார்.

அந்த இரு சீடர்களும் ஆர்வத்தோடு விரைந்து சென்றார்கள். அரசர்களும் ஆண்டவனின் திருத்தூதர்களும் கழுதையின் மேல் ஏறிச்செல்வார்கள். அதுபோல் இயேசு நாதரும் ஜெருசலத்துக்குக் கழுதையின் மேல் ஏறிச் செல்லப் போவதால், இந்த முறை அவர் தம்மையே அரசராக அறிவித்து விடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் ஆர்வத்திற்குக் காரணம் இதுதான்.

இயேசுநாதர் குறிப்பிட்ட இடத்தில் கழுதை கட்டிக் கிடந்தது. கழுதைக்கு உரியவனிடம் பெருமானுக்கு அது தேவைப்படுகிறது என்று கூறியவுடன், அவன் மறுப்பெதுவும் கூறாமல் கழுதையை அவிழ்த்துச் செல்ல அனுமதித்தான். சீடர்கள் இருவரும் அதை நடத்திக் கொண்டு வந்து சேர்ந்தார்கள்.

சீடர்கள் தங்கள் மேல் சட்டைகளைக் கழற்றிக் கழுதையின் முதுகில் போட்டார்கள். இயேசுநாதர் அவற்றின் மேல் ஏறி உட்கார்ந்து

ஏசு.-5.