பக்கம்:இறைவர் திருமகன்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

அனைவருக்கும் விளம்பரப்படுத்தினார்கள். இச் செய்தியைக் கேட்டு. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூட்டங்கூட்டமாக அவரைச் சந்திக்க விரைந்து சென்றார்கள். குருத்தோலைகளை விரித்து ஆட்டி வரவேற்று, “டேவிட்டின் மைந்தர் வாழ்க" என்று முழங்கினார்கள்.

பெருமிதமான - வெற்றிகரமான அந்த ஊர்வலம் கோயில் வாசலில் சென்று சேர்ந்தது. இயேசுநாதர் கழுதையின் முதுகிலிருந்து இறங்கி அந்தப் பெரிய ஆலயத்தினுள் நடந்து சென்றார். எழுச்சி மிக்க அக்கூட்டமும் அவரைத் தொடர்ந்து ஆலயத்தினுள் நுழைந்தது.

"டேவிட்டின் மைந்தர் வாழ்க! டேவிட்டின் மைந்தர் வாழ்க!" என்று கூச்சலிட்டுக் கொண்டே குழந்தைகள் ஆலயத்தினுள் சென்றார்கள். ஆலயத்துக் குருமார்கள் ஆத்திரத்துடன் இயேசுநாதரை அணுகினார்கள். ஐயா, அவர்கள் என்ன சொல்கிறார்கள், கேட்டீர்களா? முதலில் அவர்கள் கூச்சலை நிறுத்துங்கள்” என்று அதிகாரத்தோடு கூறினார்கள்.

இயேசுநாதர் அதைப் பொருட்படுத்தவில்லை. குழந்தைகளைத் தடுக்க அவர் முற்பட