பக்கம்:இறைவர் திருமகன்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வில்லை. "குழந்தைகளின் மழலையிலிருந்து வெளிப்படுவதுதான் உண்மையான புகழ்ச்சியாகும்" என்று வேதத்தில் எழுதியுள்ளதை நீங்கள் படித்ததில்லையா? என்று அவர்களையே திருப்பிக் கேட்டார்.

குருமார்கள் மனத்திற்குள் அவரைச் சபித்துக்கொண்டே திரும்பிச் சென்றார்கள்.

இயேசுநாதரைப் பிடித்து அப்போதே அவருக்குச் சாவுத் தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம். ஆனால் அவரைத் தொடக்கூட அவர்களுக்குப் பயமாயிருந்தது. ஏனெனில் மக்கள் கூட்டம் அவர் பக்கமிருந்தது. எனவே இயேசுநாதருக்கு எதிராக மக்களைத் திருப்புவதில் அன்றுமுதல் அவர்கள் முனைந்தார்கள்.