பக்கம்:இறைவர் திருமகன்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

செய்பவர்களும் தீயவர்களும் அதை நம்பினார்கள். தங்கள் தீச்செயல்களுக்காக வருந்தினார்கள். நீங்கள் உங்கள் தவறுகளுக்காக வருந்துவதாகவே தெரியவில்லை. நீங்கள் அவரை நம்பவேயில்லை. எனவே பாவிகளும் தீயவர்களும் உங்களுக்கு முன்னால் இறைவனின் பேரரசை எய்துவார்கள்” என்று கூறிய இயேசுநாதர் மற்றுமொரு கதை கூறினார்.

குடித்தனக்காரன் ஒருவன் திராட்சைத் தோட்டம் ஒன்றை அமைத்தான். அதைச் சுற்றி வேலி கட்டினான். சாறுபிழியும் பொறி ஒன்றை அமைத்தான். ஒரு கோபுரமும் கட்டினான். அதைத் தன் பண்ணையாட்களிடம் விட்டு விட்டு அவன் வேறொரு நாட்டுக்குச் சென்று விட்டான்.

பழுக்கும் பருவத்தில் அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பித் திராட்சைப் பழங்களைக் கொண்டுவரும்படி சொன்னான்.

வந்த வேலைக்காரர்களை அந்தப் பண்ணையாட்கள் கொடுமைப்படுத்தினார்கள். ஒருவனை அடித்து விரட்டினார்கள். மற்றொருவனைக் கொன்று போட்டார்கள். இன்னொருவனைக் கல்லெறிந்து விரட்டி விட்டார்கள்.