பக்கம்:இறைவர் திருமகன்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அவன் தன் மனைவி மேரியை ஒரு கழுதையில் உட்கார வைத்து அதை நடத்திக் கொண்டு பெத்தலெமுக்கு வந்து சேர்ந்தான்.

பெத்தலெம் சத்திரத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அங்கு தனக்கும் தன் மனைவிக்கும் தங்குவதற்கு வசதியான ஓர் இடம் கிடைக்குமா என்று ஜோசப் தேடிப் பார்த்தான். சத்திரத்தின் மூலை முடுக்குகளில் கூட ஆட்கள் இடம் பிடித்துக் கொண்டு தங்கியிருந்தார்கள். அத்தனை கூட்டம்! அவ்வளவு பேரும் அரச பரம்பரை!

ஜோசப் சத்திரத்துச் சொந்தக்காரனைப் போய்ப் பார்த்தான். "நான் என்ன செய்வேன்; ஒதுக்கித் தருவதற்குச் சிறிது கூட இடமில்லையே!” என்று சத்திரக்காரன் கையை விரித்துவிட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் ஜோசப் கலங்கி நின்றான். “ஐயா, இன்று இரவு தங்குவதற்கு மட்டும் ஒரு சிறு இடம் கொடுத்து உதவுங்கள்!" என்று கெஞ்சினான்.

சத்திரத்துச் சொந்தக்காரன் சிந்தித்தான். திடீரென்று அவன் முகம் மலர்ந்தது.