பக்கம்:இறைவர் திருமகன்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

சீடர்கள் திகைத்து நின்றார்கள். "தலைவரே இதெல்லாம் எப்பொழுது நடக்கும்?" என்று கேட்டார்கள்.

“ஒரு நாட்டுக்கெதிராக மற்றொன்று கிளர்ந்து எழும். ஓர் அரசுக்கெதிராக மற்றொன்று புறப்படும்! போர்க்குரல்கள் எங்கும் ஒலிக்கும்! எங்கும் பஞ்சம் பரவும்! கொள்ளை நோய் கூத்தாடும்! நிலநடுக்கங்கள் ஏற்பட்டு நாடுநகரங்கள் சரியும்.

"ஏமாற்றுக்காரர்கள் பலர் தோன்றுவார்கள். நீங்கள் ஏமாந்து போகாதீர்கள்.

"அரசர்கள் அதிகாரிகள் முன்னால் நீங்கள் இழுத்துச் செல்லப்படுவீர்கள். அடித்துச் சிறையில் தள்ளப்படுவீர்கள். எனக்காக நீங்கள் எல்லா மனிதர்களாலும் வெறுக்கப்படுவீர்கள். ஆனால் இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். என்ன சொல்ல வேண்டும் என்பதை புனித ஆவி உங்களுக்குச் சொல்லும். இறுதிவரை உறுதியாக நிற்பவன் காப்பாற்றப்படுவான்.

"இறுதி நாளிலே நான் தேவதூதர்கள் சூழ வருவேன். அப்போது அவரவர்க்குரிய தீர்ப்பு வழங்கப்படும். ஆனால் அந்த நாள் எப்-