பக்கம்:இறைவர் திருமகன்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

பொழுது வரும் என்று எந்த மனிதராலும் சொல்ல முடியாது. விண்ணுலகத் தேவ தூதர்களாலும் விளம்ப முடியாது.

"இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்திருக்கிறான். சமுதாயத்தின் நன்மைக்காகப் பயன்படுத்த சிறப்பான திறமைகளை ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறான். அத்திறமைகளை ஒவ்வொருவரும் நன்கு பயன்படுத்தித் தத்தமக்குரிய வேலைகளை ஒழுங்காக முடிக்க வேண்டும்"

இவ்வாறு கூறிய இயேசுநாதர் இதற்கொரு கதை சொன்னார்.

ஒரு மனிதன் வெளிநாடு போக வேண்டியிருந்தது. அவன் தன் வேலைக்காரர்களை அழைத்து அவர்களிடம் தன் பொருள்களை ஒப்படைத்தான்.

ஒருவனுக்கு அவன் ஐந்து நிறை பொன் கொடுத்தான்; மற்றொருவனுக்கு இரண்டு நிறை பொன் அளித்தான்; மூன்றாமவனுக்கு ஒரு நிறை பொன் வழங்கினான். "உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தப் பொருளை வீண்