பக்கம்:இறைவர் திருமகன்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

நிறை ஈட்டியிருக்கிறேன், இதோ பாருங்கள்" என்று பத்து நிறை பொன்னைக் காட்டினான் முதல் வேலைக்காரன்.

இரண்டாவது வேலைக்காரன் தனக்குக் கிடைத்த இரண்டோடு தான் சேர்த்த இரண்டையும் சேர்த்து நான்கு நிறை பொன்னைக் காட்டினான்.

"நன்றாகப் பயன்படுத்தினாய், நீயே உண்மையான வேலைக்காரன்" என்று அவர்கள் ஒவ்வொருவரையும் முதுகில் தட்டிக் கொடுத்தான் முதலாளி, தான் கொடுத்ததையும் ஈட்டியதையும் அவர்களையே வைத்துக்கொள்ளும்படி கூறினான்.

மூன்றாவது வேலைக்காரன் முதலாளி வந்து விட்டார் என்று அறிந்ததும் தான் புதைத்து வைத்திருந்த பொன்னைத் தோண்டி எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். "தலைவரே, நீங்கள் பொல்லாதவர் என்பது எனக்குத் தெரியும். செலவழித்துவிட்டால் சும்மா விடமாட்டீர்கள் என்று அறிவேன். ஆகவே, நீங்கள் தந்த ஒரு நிறை பொன்னையும் பத்திரமாகத் தரையில் புதைத்து வைத்திருந்தேன்.