பக்கம்:இறைவர் திருமகன்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14. உடலும் குருதியும் உங்களுக்கே

அன்று வியாழக்கிழமை. இயேசுநாதரின் சீடர்கள் அவரிடம் வந்து, “இன்று தாங்கள் விருந்துண்பதற்கு எந்த இடத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.

“நகருக்குச் செல்லுங்கள். குடத்தில் ஒருவன் தண்ணீர் கொண்டு செல்வான். அவனைத் தொடர்ந்து செல்லுங்கள். அந்த மனிதனுடைய தலைவனை அணுகி, பெருமானார் தன் சீடர்களுடன் விருந்துண்பதற்குரிய விருந்து அறை எது? என்று கேட்டுவரச் சொன்னார் என்று கூறுங்கள். அவர் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அங்கு நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் இயேசு நாதர்.