பக்கம்:இறைவர் திருமகன்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

"உண்மையில் உங்களில் ஒருவன் என் பகைவர்களிடம் என்னைக் காட்டிக் கொடுத்து விடுவான் !"

இச் சொற்களைக் கேட்டு அச் சீடர்கள் திகிலடைந்தார்கள்.

“பெருமானே, நானா ? நானா?" என ஒவ்வொருவரும் கேட்டார்கள்.

“என்னோடு ஒன்றாக அமர்ந்து வட்டிலில் உண்ணும் உங்களில் ஒருவன்தான் - நான் வட்டிலில் கை வைக்கும் போது தானும் கை வைக்கும் அந்த மனிதன்தான்" என்று பதிலளித்த பெருமான் ஜூடாஸ் இஸ்காரியட் என்ற சீடனின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். "நீ செய்வதை விரைவாகச் செய்" என்று கூறினார்.

பெருமான் தன் இரகசியத்தை எப்படியோ தெரிந்து கொண்டு விட்டார் என்பதை ஜூடாஸ் இஸ்காரியட் அறிந்து கொண்டான். உடனடியாக எழுந்து அறைக்கு வெளியில் சென்று இருளில் மறைந்துவிட்டான்.

அவ்வளவு நேரமும் அவன் பெருமானைக் காட்டிக் கொடுப்பதற்கு வாங்கிய கைக் கூலி-