உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இறைவர் திருமகன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தரையில் மண்டியிட்டு, இறைவனை நோக்கித் தொழுதார். "இறைவா, என் தந்தையே! எல்லாம் உன் எண்ணப்படியே நடக்கட்டும்!" என்று கூறித் தொழுதார். அவரைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டிய சீடர்களோ, தரையில் விழுந்து கண்ணயர்ந்து தூங்கிவிட்டார்கள்.

திரும்பிவந்து பார்த்த அவர், அவர்களை எழுப்பி, ஒரு மணி நேரம் கூட உங்களால் விழித்திருக்க முடியவில்லையா ? என்று கேட்டார். மீண்டும் அவர் சென்று தொழுகை புரிந்து விட்டுவந்தார். அப்போதும் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை எழுப்பிவிட்டு மூன்றாம் முறையாகத் தொழுகை செய்யச் சென்ற போதும் அவர்கள் மீண்டும் தூங்கத் தொடங்கி விட்டார்கள்.

அமைதியாயிருந்த அந்தக் காட்டின் இடையிலே தீடீரெனப் பல பேர் ஓடிவரும் காலடி யோசை கேட்டது. தீவட்டிகளின் ஒளிக்கதிர்கள் மரங்களின் இடைவெளிகளில் ஊடுருவிக் கொண்டு வந்தன. சீடர்கள் திடுக்கிட்டு எழுந்-