பக்கம்:இறைவர் திருமகன்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

தார்கள். இயேசு நாதரைச் சூழ்ந்து கொண்டார்கள். தீவட்டி வெளிச்சத்தில் போர்வீரர்கள் நடந்துவரும் காட்சியைக் கண்டார்கள். அந்தப் போர்வீரர்களை நடத்திக் கொண்டு வந்தான் ஜுடாஸ் இஸ்காரியட்.

அவன் ஓடோடி வந்து, “தலைவரே வாழ்க!" என்று கூவிக் கொண்டே இயேசு நாதரை முத்தமிட்டான். அந்தப் போர் வீரர்கள் முன்னேற்பாட்டின்படி முத்தம் பெற்றவர் தான் தாங்கள் பிடித்துப் போகவேண்டிய ஆள் என்று அடையாளம் புரிந்து கொண்டார்கள்.

இயேசுநாதரின் சீடர்களில் ஒருவன், தன் வாளை உருவி அவரைப் பிடிக்க வந்தவர்களில் ஒருவனின் காதை அறுத்து விட்டான். காதிழந்தவன், ஆலயத்துப் பெரிய குருவின் வேலைக்காரன் ஆவான்.

"அன்பனே, கத்தியை உறையில் போடு. கத்தியெடுத்தவர்கள் யாவரும் கத்திக்கே இரையாகி யழிவார்கள்" என்று கூறினார். தொடர்ந்து “அன்பனே, நான் இப்போது இறைவனை வேண்டினால், என் உதவிக்குப் பத்து வெள்ளம் தேவ தூதர்களை அனுப்ப மாட்டார்