பக்கம்:இலக்கண வரலாறு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

“சென்னபட்டணத்தில் இற்றைக்கு ஐம்பதறுபது வருஷத்தின் முன்னிருந்த வரதப்ப முதலியாரின் பின், எழுத்துஞ் சொல்லுமேயன்றித் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரை உதாரணங்களோடு பாடங் கேட்டவர்கள் மிக அருமை. முற்றாய் இல்லை என்றே சொல்லலாம். வரதப்ப முதலியார் காலத்திலும் தொல்காப்பியம் கற்றவர்கள் அருமை என்பது, அவர் தந்தையார் வேங்கடாசலம் முதலியார் அதனைப் பாடங்கேட்கும் விருப்பமுடையராயின பொழுது பறையூரில் திருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவர் இருக்கிறார் என்று கேள்வியுற்றுத் தமது ஊரைவிட்டு அதிக திரவியச் செலவோடு அவ்விடம் போய் இரண்டு வருஷமிருந்து பாடங்கேட்டு வந்தமையாலும் வரதப்ப முதலியார் ஒருவரே பின்பு அதனைத் தந்தைபாற் கேட்டறிந்தவர் என்பதனாலும் அது காரணமாக அவருக்குத் தொல்காப்பியம் வரதப்பமுதலியார் என்று பெயர் வந்தமையாலும் பின்பு அவர்காலத்திருந்த வித்துவான்கள் தமக்கு யாதாயினும் இலக்கண சமுச்சயம் நிகழ்ந்துழி அவரையே வினவி நிவாரணஞ் செய்தமையாலும் நிச்சயிக்கலாம்.”

__என்பது தொல், பொருள். நச்சினார்க்கினியப் பதிப்பில் (1885) சி.வை. தாமோதரம்பிள்ளை எழுதியுள்ள பதிப்புரை. பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் வந்த இப்பதிப்பில் தொல்காப்பியப் பின்னான்கியல் உரைகளே உள. இவை நச்சினார்க்கினியம் அன்று, பேராசிரியம் எனச் செந்தமிழ்த் தொகுதி 1. பகுதி 1; தொகுதி 2 பகுதி 11 ஆகியவற்றிலும், தொல், செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரையுடன் வெளிவந்த தமிழ்ச் சங்கப் பதிப்பிலும் பெரும்புலவர் இரா. இராகவ ஐயங்கார் எழுதினார்.

தொல்காப்பியம் வரதப்பர் வரவாறும், தாமோதரனாரின் நச்சினார்க்கினியர் உரைப்பதிப்புக் குறிப்பும் மேல் ஆய்வும் நமக்கு என்ன சொல்கின்றன? இளம்பூரணரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/111&oldid=1471427" இலிருந்து மீள்விக்கப்பட்டது