பக்கம்:இலக்கண வரலாறு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

உயிர் என்னும் பெயரீட்டில் வேறுபாடு இல்லை என்பாராய், “சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங் கோல் ஆகாது. அது போல இகர உகரங்கள் குறுகின விடத்தும் அவை உயிர் ஆகற்பாலன” என்கிறார் (எ. 2.).

உயிர்மெய் ஒலிக்கும் வகையை விளக்கும்போது மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையால் அக்கூட்டம் பாலும் நீரும்போல உடன் கலந்ததன்றி விரல் நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தன அல்ல என்பது பெறுதும் என்கிறார் (எ. 18).

‘இதழ் போறலான் வாய் இதழ் எனப்பட்டது’ என வாய்க்கு இதழ் எனப் பெயர் வந்த பொருத்தத்தை உவமையால் விளக்குகிறார் (எ. 83).

கலிப்பாவிற்குரிய துள்ளலோசை பற்றிக் கூறும்போது, “துள்ளுதலாவது ஒழுகுநடைத்தன்றி இடையிடை அயர்ந்து வருதல்; கன்று துள்ளிற்றென்றாற்போலக் கொள்க” என்கிறார் (பொ. 387). இவ்வாறே பிறவும் வரும் உவமைகளும் உள.

உவமையின் பயன், “புலன் அல்லாதன புலனாதலும், அலங்காரமாகிக் கேட்டார்க்கின்பம் பயத்தலும்”, என்று உவமையியல் முகப்பில் கூறும் அவர்தம் உவமைகளால் தம் கருத்தை மெய்ப்பிக்கிறார் என்க.

உரைவளம்:

இளம்பூரணர் உரைவளம், வேண்டுமிடத்து வேண்டு மளவான் விளங்கி நலம் சேர்க்கின்றது,

எழுத்தை எட்டுவகையாலும் எட்டிறந்த பலவகையாலும் உணர்த்தினார் என அவற்றைக் குறிப்பதும் (எ. முகப்பு) செப்புவகை ஆறு என்பதும், வினாவகை ஐந்து என்பதும் (சொ. 13) தகுதி, வழக்கு ஆகியவற்றைப் பற்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/127&oldid=1471487" இலிருந்து மீள்விக்கப்பட்டது