பக்கம்:இலக்கண வரலாறு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

இலக்கண வரலாறு

ஆய்வுரை

பேராசிரியர் மு. வை. அரவிந்தன்

தமிழில் இலக்கிய வரலாற்று நூல்கள் பல தோன்றியுள்ளன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்தே அறிஞர் பலர் தமிழிலக்கிய வரலாற்றுச் சிந்தனைகளை உருவாக்கிக் கட்டுரைகளும் நூல்களும் எழுதியுள்ளனர். ஆனால், இன்றுவரை ‘இலக்கண வரலாறு’ ஒன்று மட்டுமே வெளிவந்துள்ளது. அந்த நூலை 1961ஆம் ஆண்டில் தமிழறிஞர் சோம. இளவரசு அவர்கள் எழுதினார்கள். அதனைப் பேராசிரியர் மு. அண்ணாமலை அவர்கள், தமது தொல்காப்பியர் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுப் பெருமைப் படுத்தினார்கள்.

புலவர் சோம. இளவரசு இயற்றிய இலக்கண வரலாறு முதல் நூலாக இருந்தாலும், சிறந்த முறையில் அமைந்தது. அதனை அறிஞர்கள் போற்றினர்; இளைஞர்கள் கற்றுப் பயன் பெற்றனர்; ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டினர்.

அது தோன்றி 25 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பின்னர், இப்போது இரண்டாவது நூலாக 'இலக்கண வரலாறு' வெளிவந்துள்ளது. இதனை இயற்றியவர் ஆராய்ச்சி அறிஞர் இளங்குமரன் அவர்கள்.

தமிழ்நாட்டில் ஒரு சிறந்த பல்கலைக்கழகம் போல் செயலாற்றிப் பல நல்ல நூல்களைத் தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்ற மணிவாசகர் பதிப்பகம். இதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/13&oldid=1480809" இலிருந்து மீள்விக்கப்பட்டது