பக்கம்:இலக்கண வரலாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


சமயம்

ஆற்றூர்ச் சேனாவரையர் அவ்வூர்ச் சோமநாதர் கோயிலுக்கு நிலம் வழங்கிய செய்தியால் அவர் சைவ சமயத்தவர் என்பது தெளிவாம். மேலும் பிறர் உரைகளின் முகப்பில் இறைவணக்கப் பாடல்கள் இல்லாதிருக்கவும் இவருரை முகப்பில் பிள்ளையார், சிவபெருமான், கலைமகள், அகத்தியர் ஆகியோரைப் பற்றிய வாழ்த்துப் பாடல்கள் அமைந்துள்ளமை இவர் தம் சமயச்சார்பை விளக்கும். இளம்பூரணர் தொல். பொருள். ஐம்பதாம் நூற்பாவில் மேற்கோள் காட்டும் “தன்தோள் நான்கின்” என்னும் மூத்த பிள்ளையார் பாடலை இவர்தம் உரை நூன் முகப்புப் பாடலாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாம்.

சேனாவரையர் உரை சொல்லதிகாரம் ஒன்றற்கே கிடைத்துள்ளது. மற்றை அதிகாரங்களுக்கு இவர் உரை எழுதினார் என்பதற்குரிய சான்று இவர் உரையிலோ பிற வகைகளிலோ கிட்டிற்றில்லை. ஆனால் எழுத்து, பொருள் அதிகாரங்களில் இவர் கொண்டிருந்த புலமை நலம் சொல்லதிகார உரையால் விளக்கமாகின்றது.

நூலாசிரியரைச் சிறப்பித்தல்

நூலாசிரியர் இலக்கண நூற்பா யாத்தனர் எனினும், அந் நூற்பா இலக்கிய நயமுடையது என்பதை உட்கொண்டவராய்ச் “செய்யுளின்பம் நோக்கி அளபெழுந்து நின்றது” “என்றும் (210), செய்யுளின்பம் நோக்கி வினையொடும் பெயரொடும் என்றார்” என்றும் (295), “தாம் என்பது கட்டுரைச் சுவைபட நின்றது” என்றும் (398) இன்னவாறு நயம் உரைக்கும் பகுதிகளால் சேனாவரையர் நூலாசிரியரைச் சிறப்பித்தலை நிலைப்படுத்துகிறார்.

“அகத்திய முதலாயின எல்லா இலக்கணமும் கூறலிற் பல்வேறு செய்தியின் நூலென்றார்” என்று சொல்லதிகார இறுதி நூற்பா விளக்கத்தில் சேனாவரையர் வரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/135&oldid=1471494" இலிருந்து மீள்விக்கப்பட்டது