பக்கம்:இலக்கண வரலாறு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

உரைமரபு:

இலக்கண உரையாசிரியர்களின் உரைப் போக்கைப் பொதுவகையில் நோக்கினால், அவர்கள் பயிற்றாசிரியர்களாக (போதக ஆசிரியர்களாக) இருந்தவர்கள் என்பது விளங்கும். அவ்வகையில் சேனாவரையர் உரையில் ‘வினவி’ - ‘விடை’ கூறும் பகுதிகள் மிகவுண்மை தெளிவிக்கும்.

‘இச்சூத்திரம் என்ன நுதலிற்றோ?’ எனின், ‘இன்னது நுதலிற்று’ என நூற்பாக்கள் தோறும் சொல்லிச் செல்லுதல் இளம்பூரணர் உரை மரபு. சேனாவரையர் இம் மரபைக் கொண்டாரல்லர். அது கூறாக்காலும் நூற்பாவுக்குப் பொருள் கொள்ளத் தடையொன்றின்மை கண்டு அவர் விலக்கியிருத்தல் கூடும். அவர்தம் உரைச் செறிவு அவ்வாறு எண்ணத் தோன்றுகின்றது.

ஓ ஓ என வழங்கும் ஒலிக் குறிப்பை அறிவோம். “ஓ ஓ, அப்படியா செய்தி”, “ஓ ஓ என்று வாழ்கிறான்” (ஓகோ), “ஓ ஓ என்று கத்தியும் கேட்கவில்லை” இப்படியெல்லாம் இந்நாள் வழங்கும் வழக்கு சேனாவரையர் காலத்தும் இருந்தமை அவருரையால் அறிய வருகின்றது. அது தொல்காப்பியர் காலத்தில் ‘ஔ ஔ’ என்று இருந்து மாறியதை அவர் சுட்டுகிறார். ஔ காரத்தைச் சுட்டும் அவர், "இதனை இக்காலத்து ஓகாரமாக வழங்குப” என்கிறார். (281).

‘கண்டீரே கண்டீரே’ என்பன போலவரும் அசை நிலையடுக்கும், ‘நின்றை காத்தை’ என்பன போலவரும் அசைநிலையும் இக்காலத்து அரிய என்றும், இக்காலத்துப் பயின்று வாரா என்றும் கூறுகிறார். (425, 426).

ஏ என்னும் உரிச்சொல் ‘பெற்று’ என்னும் பொருளது என்கிறார் தொல்காப்பியர் (304). அதனை விளக்கும் சேனாவரையர் பெற்று— பெருக்கம். ஈது அக்காலத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/141&oldid=1471500" இலிருந்து மீள்விக்கப்பட்டது