பக்கம்:இலக்கண வரலாறு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

பேட்டில் ‘பேராசிரியர் உரை’ என்றும் குறிப்பு இருந்தமை நல்வாய்ப்பாக அறிஞர் இரா. இராகவர்க்கு வாய்த்தமை பேரறிய வைத்தது. மற்றொரு குறிப்பும் அவர்க்குத் துணையாயிற்று.

மெய்ப்பாட்டியல் முதலாய நான்கு இயல்களின் தொடக்கத்திலும், "இவ்வோத்து என்ன பெயர்த்தோ ! எனின்? என்று உள்ளமை நச்சினார்க்கினியர் உரையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதலைக் கண்டு கொண்டார். நச்சினார்க்கினியர் உரை இவ்வாறு இயலாமை அவருரையால் தெளிவாதலைச் சுட்டிக் காட்டி நிறுவினார்,

காலம்:

பேராசிரியர் இளம்பூரணர், இறையனார் களவியலுரைகாரர், யாப்பருங்கல விருத்தியார், தண்டியலங்காரர் ஆயோர்க்குப் பிற்பட்டவர் என்பதற்கு நூற்சான்றுகள் பலவுள்ளன (மெய்ப். 25 உவம், 37.). நச்சினார்க்கினியர் இவரைச் சுட்டிக் காட்டி வரைதலானும், பரிமேலழகர் பேராசிரியர் உரையை மறுத்து எழுதுதலானும் (திருக்.632) அவர்கட்கு இவர் காலத்தால் முந்தியவர் என்பது தெளிவாம். ஆகலின் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் பேராசிரியர் என்க.

சமயம் :

பேராசிரியர் கொண்டிருந்த சமயம் இன்னதென வெளிப்பட அறிய வாய்ப்பில்லை; எனினும், இவர் சிவ வழிபாட்டினர் என்பது அறிய வாய்க்கின்றது. அச் சிவ வழிபாடும் நெகிழ்வுடையதாய் அமைந்துள்ள நிலைமையும் புரிகின்றது.

“வாழ்த்தியல் வகையே” என்னும் செய்யுளியல் நூற்பாவில் (109) வாழ்த்தப்படும் பொருளாவன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/149&oldid=1471508" இலிருந்து மீள்விக்கப்பட்டது