பக்கம்:இலக்கண வரலாறு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் மழையும் நாடும் என்பன; அவற்றுட் கடவுளை வாழ்த்தும் செய்யுள் கடவுள் வாழ்த்தெனப்படும்” என்று கூறி நற்றிணையிலும் அகநானூற்றிலும் அமைந்துள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களை எடுத்துக் காட்டுகிறார். இவற்றுள் முன்னது திருமாலைப் பற்றியது; பின்னது சிவனைப் பற்றியது.

அடுத்துவரும் “வழிபடு தெய்வம்” என்னும் புறநிலை வாழ்த்து நூற்பாவுரையில் காட்டிய “இமையா முக்கண்”, “திங்கள் இளங்கதிர்” என்பன சிவனைப் பற்றியவை. இவ்விரண்டும் இவர் இயற்றியவை என்று அறியத் தக்கபாடல்கள். மேலும், கொச்சக ஒரு போகில் (செய். 149) இவர் காட்டும் எடுத்துக்காட்டுகள் பெரும்பாலும் இவர் பாடியனவே என்று அறியக் கிடக்கின்றன. அவற்றுள் பலவும் சிவபெருமான் பற்றியவை. திருமால், மூத்த பிள்ளையார், இளைய பிள்ளையார் பற்றியும் பாடியுள்ளார். இதே நூற்பாவுரையில் இளம்பூரணர் கலித்தொகைப் பாக்களையே எடுத்தாண்டமைகிறார் என்பது ஒப்பிட்டுக் காணற்குரியது.

கடவுளை வாழ்த்துதல், முனிவரை வாழ்த்துதல், ஆவை வாழ்த்துதல், பார்ப்பாரை வாழ்த்துதல், அரசரை வாழ்த்துதல், மழையை வாழ்த்துதல், நாட்டை வாழ்த்துதல் என்பன பழந்தமிழர் வழிவழிக் கொண்டொழுகிய வழிபாட்டியல்பினவே என்பதைச் சங்கச் சான்றோர் நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றின் வழியே அறிந்து கொள்ளலாம். ‘பார்ப்பார் வழிபாடும்’ அத்தகைத்தோ எனின், “பார்ப்பான் என்பான் நன்றும் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவான்” என்னும் பேராசிரியர் உரையே தெளிவிக்கும் (செய். 189). ‘அறிவன் தேயம்’ (புறத். 16) என்பதில் வரும் ‘அறிவன்’ என்பதற்குக் ‘கணியன்’ என உரையாசிரியர் வரைந்ததையும் அறிந்து கொள்க. ஆகலின் அறிவன் வழிபாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/150&oldid=1471509" இலிருந்து மீள்விக்கப்பட்டது