பக்கம்:இலக்கண வரலாறு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


அகத்தியர், அம்மானைப்பாடல், அவ்வையார். ஆனந்தவுவமை, இசைக்கூத்து, எழுகூற்றிருக்கை, ஏகபாதம், ஏழிற்கோவை, ஐயனாரிதனார், கட்டளைக் கலி, கடகண்டு, கடைச்சங்கத்தார், , கலம்பகம், கலித்தொகை (நூற்றைம்பது கலி), களவியல், காக்கை பாடினியார், கானப்பேர், குறிஞ்சிப்பாட்டு, கைக்கிளைப் படலம், கொங்குவேளிர், கோவை, சக்கரம், சகரர், சங்கச்சான்றோர், சாய்க்காடு, சிற்றிசை, சிறுகாக்கை பாடினியார், சீத்தலைச்சாத்தனார், சுழிகுளம், தகடூர் யாத்திரை, நக்கீரர், நரிவெரூஉத்தலையார் நாடகச் செய்யுள், பட்டிமண்டபம், பதினெண் கீழ்க்கணக்கு, பரணி, பரிபாடல் (பரிபாடல் எழுபது), பாட்டும் தொகையும், பாட்டுமடை, பாவைப்பாடல், பெருந்தேவனார் பாரதம், பெருமானடிகள் (இறையனார்) பேரிசை, பொய்கையார், மாலை, மிறைக்கவி, முத்தொள்ளாயிரம், மூவடி முப்பது, மோதிரப்பாட்டு, யாப்பதிகாரம், வஞ்சி, வசைக்கூத்து, வரி விளக்கத்தார் கூத்து என்பனவும் பிறவும் இவர் சுட்டிச் சொல்லும் சிறப்புப் பெயர்கள்.

உலகியலறிவு

பேராசிரியர் கொண்டிருந்த உலகியலறிவு ஆங்காங்கு அறியக் கிடக்கின்றது. ஆரியர் கூறும் தமிழை நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டுகிறார் (மெய்ப். 1). சாதித் தருமம் போற்றுதலைக் குறிக்கிறார் (மெய்ப். 12). காடு கெழு செல்வி (காளி) வழிபாட்டைப் பல இடங்களில் கூறுகிறார் (மெய்ப். 12; செய். 149;). நான்கு வருணங்களைக் குறிக்கிறார் (மெய்ப். 25). தமிழில் மந்திரப்பாட்டு இருந்ததைச் சுட்டுகிறார் (செய், 158: 178). ஆரியம் நன்று தமிழ் தீது’ என்றவன் சாவவும், உயிர்த்தெழவும் பாடிய பாட்டுகளையுரைத்து, இவை “தெற்கண் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம்” என்று குறிப்பு வரைகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/159&oldid=1471516" இலிருந்து மீள்விக்கப்பட்டது