பக்கம்:இலக்கண வரலாறு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

115)

(செய். 178). சீட்டுக்கவி வரைதல் வழக்கை 'ஓலைப்பாயி (சு)ரம்' என்கிறார் (செய்.149). அவ்விடத்திலேயே களம்பாடு பொருநர் கட்டுரை, தச்சு வினைமாக்கள் சொற்றொடர் என்பவற்றையும் குறிப்பிடுகிறார். “ஓர் பானையும் குரீஇயும் தம்முள் நட்பாடியது”, “சிறுகுரிஇயுரை”, "தந்திரவாக்கியம்" என்பவற்றையும் (செய்.173), யானை, கமுகு, நெருப்பு என்னும் பொருள் தரும் விடுகதைகளையும் (செய்.176), குறிப்பு மொழிக்கு யானை' என்பதையும் (செய்.179) இவர் எடுத்துக்காட்டுப் பாடல்களால் கூறுதல் அக்காலத்து மக்களிடை வழங்கிய வழக்கின் தொகுப்பு எனற்பாலன. புலவுத் துறந்த துறவோர் பொய் கூறார் என்று கூறுவதால் அக்காலத் துறவோர் சிறப்பும் (மர. 94), புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங்கொல் என்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலாம் என்னும் உளவியல் செய்தியும் (மெய்ப். 12) கூறும் பேராசிரியர் உலகியல் திறம் பெரிதென அறியலாம்.

இலக்கிய வன்மை

‘புகுமுகம் புரிதல்’ முதலாக வரும் மெய்ப்பாடுகள் அனைத்துக்கும் முறையாய் அமைந்த எடுத்துக் காட்டுப் பாடல்கள் பேராசிரியர் இயற்றியன என்றே கொள்ள வாய்க்கின்றன; இவர்தம் இலக்கியப் படைப்புச் சீர்மையை விளக்குவனவாக அமைகின்றன. அன்றியும் இவர் சில இடங்களில் வரையும் உரையே பாவாக இயலுதல் காணக் கூடியனவாம்.

மெய்ப்பாட்டியல் பன்னிரண்டாம் நூற்பாவில்,

“பார்ப்பாராயிற்,
குந்தி மிதித்துக் குறுநடை கொண்டு
வந்து தோன்றலும்,

அரசராயின், எடுத்த கழுத்தொடும் அடுத்தமார்பொடும்
நடந்து சேறலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/160&oldid=1471517" இலிருந்து மீள்விக்கப்பட்டது